News Just In

9/28/2025 05:44:00 AM

மட்டக்களப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு



மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பில், இலங்கை பத்திரிகைப் பேரவை நடாத்தும் "சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்றைய (27) மட்டக்களப்பு, பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர், திருகோணமலை பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக ஆய்வு சிரேஷ்ட விரிவுரையாளரும் கலந்து கொண்டனர்.

இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பிரியன் ஆர். விஜபண்டார், மட்டக்களப்பு ஊடகப்பிரிவு பிரதானி வஜீவானந்தம் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேச செயலக ஊடக உத்தியோகஸ்தர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

No comments: