News Just In

9/29/2025 09:53:00 AM

ராஜ பக்சர்களின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம்!- அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

ராஜ பக்சர்களின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம்


ராஜ பக்சர்களின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம். தற்போதைய அரசில் அவ்வாறு செயற்பட முடியாதுள்ளது. எப்பகுதிக்குச் சென்றாலும், சவால்கள் வந்தாலும் நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், தலைவர்கள் தொடர்பிலும் கதைப்போம். மகிந்த, கோட்டாபய ஆட்சிக் காலத்திலும் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம்.ஆனால் தற்போது பிடிமானங்களை இழந்துள்ளோம். கதைக்கும்போது எம்மை அரச எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர். சில கட்சிகளுக்குச் சார்பாகச் செயற்படுகின்றோம் என விமர்சிக்கின்றனர். அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசு எமக்கு வழங்க வேண்டும்.

No comments: