ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம்
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இதன்போது, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம் தெரிவு செய்து, 360 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் செலவிடப்படும் தொகை 36 மில்லியன் ரூபாவாகும்.
மேலும், கண்டி மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் விடய அலுவலர்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு சனிக்கிழமை (13) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியம் சார் பணிகளில் ஈடுபடும் விடய அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தல் மற்றும் மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குதல், நவீனமயப்படுத்தப்பட்ட இணையவழி பொறிமுறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் விரைவான சேவைகளை வழங்கத் தேவையான அறிவு மற்றும் பயிற்சியை வழங்குதல் இந்த நிகழ்ச்சித் திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
9/12/2025 03:34:00 PM
Home
/
Unlabelled
/
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம்
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: