News Just In

9/22/2025 07:22:00 PM

குச்சவெளி பிரதேச உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது!

குச்சவெளி பிரதேச உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது!
அபு அலா
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டம் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி இன்று வரை குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்றது.

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் எ.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிநாள் இந்நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கான சான்றிதழ்களை தவிசாளர் எ.முபாறக் வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் சேவையில் சுற்றுச் சூழல், கிராம மட்ட பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரித் திட்டம், ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார அனுமதிப் பத்திரம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளுடன் வழிகாட்டல்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக, குச்சவெளி பிரதேச சபைக்குட்ட 87 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம், மதஸ்தளங்களுக்கான உபகரணங்கள், வியாபாரப் பத்திரங்கள், மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான சான்றிதழ் மற்றும் கிண்ணங்கள், சிறு கைத்தொழில் முனைவோருக்கான வியாபார அனுமதிப்பத்திரங்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் தீர்க்கப்படாத பல்வேறுபட்ட பரச்சினைகள் கடந்த பல வருடங்களாக இருந்து வந்து. இப்பிரச்சினைகளில் பலவற்றை உள்ளூராட்சி வார நிகழ்வு நாட்களில் தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களும், வியாபாரிகளும், சிறு கைத்தொழில் செய்வோர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இதனை அமுல்படுத்தி செயற்பட்ட அரசுக்கும், குறிப்பாக தவிசாளர் ஏ.முபாறக் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

No comments: