News Just In

9/08/2025 04:02:00 PM

ரவிராஜ் கொலை சந்தேகநபர் : மித்தெனிய ஐஸ் போதை வழக்கில் மீண்டும் கைது

ரவிராஜ் கொலை சந்தேகநபர் : மித்தெனிய ஐஸ் போதை வழக்கில் மீண்டும் கைது



மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் விராஜ் மனம்பேரி, ரவிராஜ் கொலையில் கைது செய்யப்பட்டவராவார் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கொள்கலன்களிலும் பொருட்களை புதைத்ததில் ஈடுபட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் சேனாதீரவை, நேற்று முன்தினம் (06) மதியம் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது சகோதரர் விராஜ் மனம்பேரி கைது செய்வதற்கான நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. அவர் இலங்கை பொலிஸ் துறையில் பணியாற்றிய அதிகாரி என்றும் கூறப்படுகிறது.

நாரஹேன்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நடராஜை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.

அந்த நேரத்தில், அவர் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்தேக நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர் என்றும், சில அரசியல்வாதிகளின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கஜநாயக்க கும்பலில் இவர் ஈடுபட்டதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றி தற்போது மர வியாபாரியாகக் காட்டிக் கொள்ளும் நபரான பியால் சேனாதீர மற்றும் மெரவர உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபைக்காக போட்டியிட்ட அவரது சகோதரர் விராஜ் மனம்பேரி ஆகியோர் இரண்டு கொள்கலன்களையும் தங்கள் இடத்திலிருந்து அகற்றியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

No comments: