கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 40 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய கரூர் சம்பவம் தொடர்பில் தற்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் விசாரணைக்குப் பிறகு முழுமையான தகவல்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments: