மொட்டு கட்சியின் அமைப்பாளரே போதைப்பொருள் வியாபாரி; ஆனந்த விஜயபால சுட்டிக்காட்டு - சபையில் கொந்தளித்த நாமல்!

மொட்டுக் கட்சியின் அமைப்பாளரே போதைப்பொருள் வியாபாரி. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மொட்டுக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறியவை பொய்க்குற்றச்சாட்டுக்கள். இதனாலேயே அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்று அமைச்சர் ஆனந்த விஜயபால சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐஸ்போதைப்பொருள் முக்கியஸ்தர் மொட்டு கட்சியிலேயே உள்ளார். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மொட்டு கட்சியின் அமைப்பாளரே போதைப்பொருள் வியாபாரி.
நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். கொள்கலன்கள் தொடர்பான முறைப்பாடுகளும் சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகவே அரசாங்கத்தின் மீது நாமல் ராஜபக்ச முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்து பொய்யாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமது கட்சி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து சபையின் இடைநடுவே நாமல் ராஜபக்ஸ கொதித்தெழுந்து பேசியுள்ளார்.
அதில் தயவு செய்து கூக்குரலிடாமல் நான் சொல்வதைக் கேளுங்கள். எமது உறுப்பினர் தவறு என்றால் கூடுதல்பட்ச தஒண்டனை வழங்குங்கள். சர்வதேச உளவுத் தகவல்களை இங்கு செயற்படுத்தவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
No comments: