News Just In

9/06/2025 09:00:00 AM

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: