News Just In

8/30/2025 01:02:00 PM

இலங்கை யாழ். செம்மணி ஆய்வு- வெளிப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதி! யாழ். செம்மணி ஆய்வு- வெளிப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதி!


யாழ். செம்மணி ஆய்வு- வெளிப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதி!




சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். செம்மணியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதிக்கான அகழ்வாய்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 187 மனித என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றில் 174 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இடம்பெற்று வரும் அகழ்வின் போது சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள், ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையில் உள்ள எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதிகள் அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய (29) தினம் 10 என்புக்கூடுகள் வெளிப்பட்டதுடன் 10 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அதில், பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் அவற்றை முற்றாக அகழ்ந்தெடுத்ததன் பின்னர் பெறப்படும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அவை குறித்து உறுதியாகக் கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: