
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு Patriot ஏவுகணைகள் அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
இது, அவர் இந்த போருக்கெதிராக ஏற்கனவே எடுத்திருந்த ஆயுத மறுப்பு நிலைப்பாட்டிலிருந்து பாரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
“புடின் பகல் முழுக்க நல்லவராக நடித்து, இரவில் எல்லாம் குண்டுவீசுகிறவர்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவியாக செய்யவில்லை, "பைத்தியக்காரதனமான ரஷ்ய தாக்குதல்களை எதிர்க்க அவர்களுக்கு Patriot தேவை” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஏவுகணைக்கான 100 சதவீதம் பணத்தையும் உக்ரைன் செலுத்தும். அமெரிக்கா எந்தவொரு இலவச உதவியாகவும் இதனை அனுப்பவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். இது, பைடன் நிர்வாகத்தின் நேரடி நிதி உதவியிலிருந்து வித்தியாசமானது.
ட்ரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்?
முன்னதாக, ரஷ்யாவை தூண்டிவிடக்கூடாதென்று நினைத்து, ட்ரம்ப் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை அனுப்ப மறுத்திருந்தார்.
ஆனால் தற்போது, புடின் தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில், ட்ரம்ப் தற்காப்பு ஆயுதங்களை அனுப்ப தெளிவான அனுகூலத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளார்.
ஜூலை 10-ஆம் திகதி ரோம் நகரில் நடந்த சந்திப்பின் போது, உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி, ட்ரம்புடனான உரையாடல் “மிகவும் நேர்மறையானது” என்று கூறியிருந்தார்.
Patriot ஏவுகணைகளை உடனடியாக அனுப்ப உத்தியோகபூர்வ பணிகள் தொடங்கியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
No comments: