
பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதை 16ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய தேர்தல் மசோதாவில் குறித்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில், பிரித்தானிய தேர்தல் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டை கட்டுப்படுத்துதல், அரசியல் நன்கொடைகள் குறித்த விதிகளை கடுமையாக்குதல் ஆகியவை அடங்கும்.
1969ஆம் ஆண்டு பிரித்தானியா, வாக்களிக்கும் வயதை 21இலிருந்து 18ஆக குறைத்தது
தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் கவுன்சில் தேர்தல்களுக்கும், செனட் மற்றும் ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது 16ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: