கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனை பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இன்று (21) நடைபெற்றது.
இதன்போது அண்மையில் நடந்து முடிந்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன் டீ. நாதீக் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது டன், மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி எச்.எம்.எப்.ஏ.சாரா, மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள், கோட்ட மட்ட தமிழ்மொழித்தின போட்டிகளில் சாதித்தவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜவாங்ஹீர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். நூருல் ஹுதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர். மேலும் பாடசாலை பிரதியதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாத்தீம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இதன்போது மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி எச்.எம்.எப்.ஏ.சாராவை பாராட்டி அவரது ஆசிரியர் எஸ்.எல். நவாஹிர் பணப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments: