News Just In

7/20/2025 12:03:00 PM

கல்முனை ஸாஹிரா மாணவன் எம்.எல்.ஏ. அன்ஸாப் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

கல்முனை ஸாஹிரா மாணவன் எம்.எல்.ஏ. அன்ஸாப் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு


நூருல் ஹுதா உமர்

திருகோணமலை மக் ஹெய்ஸ்ர் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எல்.ஏ. அன்ஸாப் தனிநபர் ஒற்றையர் போட்டியில் சிறப்பான விளையாடி இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட ஒற்றையர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்களான ஏ.எம். அப்ராஜ் ரிலா, எம்.எச்.எம். முஸ்தன்ஸிர் அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

No comments: