News Just In

7/21/2025 11:29:00 AM

டிவிஷன் 3 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி : தமனையை வீழ்த்தி இரு இன்னிங்ஸிலும் வென்றது கல்முனை ஸாஹிரா

டிவிஷன் 3 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி : தமனையை வீழ்த்தி இரு இன்னிங்ஸிலும் வென்றது கல்முனை ஸாஹிரா


நூருல் ஹுதா உமர் 
இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட டிவிஷன்-III கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும், தமனை மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான போட்டி சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஸாஹிரா அணி 34.3 ஓவர்களை எதிர்கொண்டு 03 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமனை மஹா வித்தியாலய அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் முதல் இன்னிங்ஸில் ஸாஹிரா கல்லூரி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தும் ஆட அனுமதி வழங்கியதற்கு இணங்க தமனை மகா வித்தியாலய அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் சகல விக்கட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் ஸாஹிரா கல்லூரி போட்டியில் வெற்றி சுவீகரித்துக் கொண்டது.

கல்முனை ஸாஹிரா அணி வீரர் எஸ்.ஆபித் (78) பந்துகளில் 112 ஓட்டங்களையும் , மற்றும் எம்.டி அப்துல்லாஹ் 65, எஸ் சிலக்சன் 62 தலா ஓட்டங்களை பெற்றதோடு பந்து வீச்சில் யூ.சப்ஹி 21/7, ஜ.அபாத் 16/4 விக்கெட்டுகளையும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் பெற்றனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர் எம்.எம்.றஜீப் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் ஆகியோருக்கும் பாடசாலையின் முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) , இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எல்.எம். தன்ஸீல், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்

No comments: