News Just In

7/17/2025 02:52:00 PM

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயது பூப்பந்து அணி மாகாணமட்ட சம்பியனானது

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயது பூப்பந்து அணி மாகாணமட்ட சம்பியனானது.


நூருல் ஹுதா உமர்

திருகோணமலை மக்கேசர் உள்ளக அரங்கில் 2025.07.15 - 2025.07.17 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கும்கிழக்குமாகாணபாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்து போட்டியில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்து அணியினர் கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் கல்முனை ஸாகிறா கல்லூரியை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தை சுவீகரித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

வெற்றி பெற்ற அஷ்ரக்கியன் பூப்பந்து அணி வீரர்களை வாழ்த்தி பாராட்டுவதோடு இதற்கான ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய கல்லூரி முதல்வர் ஏ.அப்துல் கபூர், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் எம்.ஐ. எம். அஸ்மி, இம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை பூப்பந்து பொறுப்பாசிரியர் எம்.எம். தன்ஸீப், உதவியாக இருந்த எம்.ஏ.எம்.எச். அன்வர், உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எஸ்.எம். சபீர், எம்.எம்.எம். ஹாஸீக், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.எஸ்.ஐ. மௌலானா ஆகியோருக்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்கம், பழைய மாணவர் அமைப்பு மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கும் அஷ்ரக்கியன் சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

No comments: