அபயம் அமைப்பினால் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Visual Field Analyzer
அபயம் அமைப்பினால் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Visual Field Analyzer மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு நன்கொடையாக இன்று உத்தியோகபூர்வமாக கை அளிக்கப்பட்டது. அபயம் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் தவனேசன் அவர்களால் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு கையளிக்கப்பட்டு பின் இந்த உபகரணம் டாக்டர் யசோதா ரமேஷ் (கண் வைத்திய நிபுணர் ) அவர்களுக்கு பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது . மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் அபயம் நிறுவனத்திற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
No comments: