News Just In

5/19/2025 07:54:00 AM

நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கான நிதி உதவிகள் வழங்கி வைப்பு

நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கான நிதி உதவிகள் வழங்கி வைப்பு !


நூருல் ஹுதா உமர்

10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் மத்திய முகாம் நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் ஊடாக மத்தியமுகாம் 12 கிராமம் 1ம், 2ம், 3ம் வட்டாரங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மின் இணைப்புக்களும், குடிநீர் இணைப்பும் பெறுவதற்கான நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிதியுதவிகளை நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகருமான அபூபக்கர் நளீர் வழங்கி வைத்தார்.

நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பானது பல வருடங்களாக மக்களுக்கு சேவையாற்றி வருவதோடு அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.ஏ.நளீர் யின் முயற்சியால் பல நற்பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் 10 வருட நிறைவை முன்னிட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சுமார் 6 இலட்சம் பெறுமதியான 10 வீடுகளை கையளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வாழ்வாதார உதவிகள், தொழில் மேம்பாட்டு உதவிகள் என பல்வேறு சமூக நல உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments: