News Just In

5/25/2025 04:09:00 PM

திருமலை மாவட்ட அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீடு!

திருமலை மாவட்ட அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீடு
l


திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற இரு ஆவணத் திரைப்பட வெளியீடு திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

குறித்த வெளியீடுகளை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC) ஏற்பாடு செய்திருந்தது.

இதில் குறித்த பகுதியில் உள்ள மக்களின் முதன்மையான சிக்கல்கள் தொடர்பில் ஆவணப் படுத்தும் வகையில் குறித்த திரைப்படங்கள் தயாரிக்க பட்டுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ,சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது

No comments: