பாராளுமன்றத்தில் பிரதமருடனான கேள்வி பதிலின் போது...!
நேற்றைய முன்தினம் 11.04.2025 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமருடனான அதிரடியான கேள்வி பதிலின் போது...! எமக்கான அரசின் நடவடிக்கைதான் என்ன..! முழுவதும் தொகுக்கப்பட்டுள்ளது.
நன்றி பிரதி சபாநாயகர் அவர்களே.. நான் இந்த கேள்வியை பிரதமரிடம் கேட்க விரும்புகின்றேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. எனினும்இ மோதலின் மூல காரணங்களை அரசாங்கம் இன்னும் தீர்க்கவில்லை.
மேலும்இ உண்மை மற்றும் நீதிக்கான உண்மையான முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைக் குழுக்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நீண்ட பட்டியலுடன்இ தண்டனை வழங்குவதில் தவறியுள்ளன. ஆகவேஇ இவற்றினாலும் ஏனைய காரணிகளாலும்இ இலங்கையில் நல்லிணக்கத்தில் பல சவால்கள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. எனவே பிரதமரிடம் பின்வரும் கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
01. எனது மாவட்டம் மற்றும் ஏனைய பகுதிகளில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?
2.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
3.அரசியல் கைதிகளை எப்போது விடுவிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது?
4.பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் ஏன் பயன்படுத்துகிறது? அது ரத்து செய்யப்படுமா?
5.அரசு மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் அபகரிக்கும் நிலம் தொடர்பான கருத்து?
6.புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான காலக்கெடு என்ன?
பிரதி சபாநாயகர் அவர்களேஇ இந்த நாட்டில் வன்முறை இடம்பெற்ற வரலாறு உண்டு என்பதையும்இ அந்த வன்முறையில் அங்கம் வகித்த மற்றும் அந்த வன்முறைஇ போர் மற்றும் மோதல்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் அட்டூழியங்களை இழைத்துள்ளனர் என்பதையும் நன்கறிவோம். அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். குறிப்பிட்ட அடையாளப்படுத்தப்பட்ட ஏதேனும் வழக்குகள் தொடர்பான விபரங்கள் கௌரவ உறுப்பினரிடம் இருந்தால்இ அதுபற்றிய விசேடமாக தேடிப்பார்க்க நாம் தயாராக உள்ளோம்.
கௌரவ உறுப்பினர் குறிப்பிட்டதைப் போன்று யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு பல அரசுகள் ஆட்சியில் இருந்தன. ஆட்சிக்கு வந்த சில அரசுகள் தாங்கள் செய்த அட்டூழியங்களை மூடிமறைக்க முயன்றனஇ மற்றவை அந்தக் கொடுமைகளை விசாரிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தன. எனவே 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த விசாரணை சிக்கலானது. மற்றும் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் சிக்கலானது என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். மேலும் ஆதாரங்களை சேகரிக்க உள்ளோம்.
தற்போது அரசாங்கம் சில அடையாளம் காணப்பட்ட வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துகின்றது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சில ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இரண்டாவது கேள்விக்கான பதிலானதுஇ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாம் குறிப்பிட்டிருந்தோம். அதற்காகஇ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் செயற்படுவதோடுஇ அதற்கான செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் உதவிகளை வழங்குகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் 231ஆவது பக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்றுஇ முழு நாட்டிலும் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். உண்மையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகஇ அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்கள் பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இவை மிகவும் கூருணர்வு மிக்க சம்பவங்கள். எனவே நாம் அதற்கான நீதியைப் பெற்றுக் கொடுப்போம். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான பதிலை உரிய காலத்தில் நாம் வழங்குவோம். அதற்கு தேவையான பொறிமுறைகளை நாங்கள் வலுப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
மூன்றாவது கேள்வி - கடந்த பல அரசாங்கங்களினால் சிலர் முறைகேடான சம்பவங்களை முன்னெடுத்துள்ளனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். நாம் அந்த நிலைக்குச் செல்ல மாட்டோம். கௌரவ உறுப்பினர் அவர்களேஇ குறிப்பிடத்தக்க அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்கு இலக்கம் அல்லது ஏதாவது குறிப்பிட்ட விடயங்களை தந்தால்இ வழக்கின் தற்போதைய நிலை மற்றும் விடுவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோம்.
அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான குழுவொன்றை அமைப்பதற்குஇ நீதியமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் அவசர தன்மையை உணர்ந்துஇ குறித்த குழுவிற்கு பணிகளை துரிதப்படுத்துமாறு நாங்களும் அறிவித்துள்ளோம். அச்சட்டத்தை நீக்குவதற்காகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்காகவும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நாம் கூறியுள்ளோம். தேசிய பாதுகாப்பு என்று வரும்போது சில சந்தர்ப்பங்களில் இதனை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஆனால்இ ஏற்கனவே காணப்படும் சட்டத்திற்கு உட்பட்டவாறாகும். 2015இ 2020 போன்ற காலப்பகுதிகளில் அவர்கள் அடிக்கடி பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தவர்களும்இ அவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் இதற்கெதிராக கதைக்கவில்லை. எனினும் நாம் இதன் பாரதூரம் பற்றி அறிவோம். நாம் இது பற்றி கவனஞ்செலுத்துவோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு நாம் செயற்படுவோம்.
ஐந்தாவது கேள்விக்கான விடை. கடந்த காலத்தில் அரசியல் ரீதியான காணிகள் அபகரிப்பு இடம்பெற்றுள்ளன என்பதை நாம் ஏற்கின்றோம். எமது விஞ்ஞாபனத்தின் 231ஆவது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டவாறுஇ குறிப்பிட்ட பகுதிகளில் இன அமைப்பை மாற்றும் நோக்கத்துடன் நிலத்தை ஒதுக்கவோ அல்லது விநியோகிக்கவோ மாட்டோம். இராணுவத்தினர் வசமிருந்த சில காணிகளை கடந்த சில அரசாகங்கள் விடுவித்தன. அதேபோன்று எஞ்சியுள்ள கணிகளையும் இராணுவத்திடமிருந்து விடுவிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். இது பற்றிய மேலதிக தகவல்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். எமது அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை நான் சமர்ப்பிக்கின்றன்.
ஆறாவது கேள்விக்கான பதில். நாம் அரசாங்கத்திற்கு வந்ததும் இரண்டு விடயங்களை கூறியிருந்தோம். ஒன்று பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல்இ அடுத்தது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல். அந்த அடிப்படையில் தாமதிக்கப்பட்டு இருந்த தேர்தல்களை நாம் உடனடியாக நடத்த நடவடிக்கை எடுத்தோம். அந்த வகையில் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோன்றுஇ நாட்டின் ஜனநாயகத்தை நாம் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள மேற்கொண்டு வருகின்றோம். இரண்டு தேர்தல்களை ஆறு மாத காலத்திற்குள் நடத்தியுள்ளோம். அடுத்த மாதம் மூன்றாவது தேர்தலையும் நடத்தவுள்ளோம். மேலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தவுள்ளோம். இவை பல வருட காலமாக நடத்தப்படாமல் உள்ளன. அதேபோன்றுஇ எமது விஞ்ஞாபனத்தின் குறிப்பிட்டவாறுஇ நாம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலும் பணியாற்றுவோம். ஏற்கனவே இது தொடர்பாக பல வேலைத்திட்டங்களை நாம் செய்திருக்கின்றோம். ஒரு புதிய அரசியலமைப்பிற்கு செல்வதற்கு முன்னர் பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் நாம் ஆராய வேண்டும். எனவே பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரியாகவும்இ கிரமமாகவும்இ பலரின் கருத்துக்களை உள்வாங்கியதாகவும் இதனைச் செய்ய வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகும். இதன் மூலம் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை வழங்க முடியும்.
கௌரவ உறுப்பினர் அவர்களே நன்றி. என்னுடைய நல்ல நண்பர் பிரதமர் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் வழங்கிய பல பதில்கள் தொடர்பாக நான் திருப்தி அடையவில்லை. எனினும்இ அவருடைய அமைச்சரவையில் உள்ள சில குண்டர்களை போல் அல்லாமல் அவர் பதில் வழங்கியமைக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
உங்கள் உரையிலேயே நீங்கள் தெளிவாக ஒரு விடயத்தை கூறி இருந்தீர்கள். அடையாளப்படுத்தப்பட்ட சில விடயங்கள் எனும்போது அது உங்களுக்கும் தெரியும். கடந்த காலத்திலேயே இந்த நாட்டிலே எத்தனையோ வன்முறைகள்இ படுகொலைகள் நடந்துள்ளன. கடந்த நீதி அமைச்சின் விவாதத்திலே அந்த வழக்குகள் தொடர்பான விடயங்களை நான் தந்திருந்தேன். திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து பேர் தொடர்பானதாக இருக்கட்டும்இ அவ்வாறு இல்லை என்றால் வடக்கு கிழக்கில் கடத்தப்பட்ட உறவினர்களாக இருக்கட்டும்இ 2009ஆம் ஆண்டிலே நேரடியாக வைத்தியசாலைகளை தாக்கியமை இதெல்லாம் நாங்கள் தான் விபரங்களை உங்களுக்கு தர வேண்டும் என்று அவசியம் கிடையாது. முக்கியமான சம்பவங்களாக அடையாளப்படுத்தப்பட்ட சில வழக்குகள் உள்ளன. 2009ஆம் ஆண்டிலிருந்து 16 வருடங்கள் கடந்த பிறகு அந்த காலப்பகுதியில் இருந்து ஆட்சியாளர்கள் சம்பந்தமாக இருக்கின்ற எல்லா குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. அதனால்தான் சில அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகளை குறிப்பிடுகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தை தான் நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட சமூகமான தமிழ் சமூகம்இ இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்இ இழப்பீட்டு அலுவலகம் இரண்டையும் நிராகரித்துள்ளனர். நீதிமன்ற பொறிமுறை இல்லாத எந்தவொரு முறையையும் ஏற்றுக்கொள்ள பாதிக்கப்பட்ட சமூகமான எமது மக்கள் தயாராக இல்லை.
கௌரவ பிரதமர் அவர்களேஇ நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று வந்துள்ளீர்கள். உங்களுடைய செயற்பாடுகள்இ கௌரவ விஜித்த ஹேரத்இ அநுர குமார திசாநாயக்க அவர்களுடைய செயற்பாடுகள் ஆகியவற்றை கண்டுதான் மக்கள் உங்களுடைய கட்சிக்கு வாக்களித்தார்கள். தவிர உங்களை சுற்றி இருக்கின்றவர்களை அப்போது கவனித்திருந்தால் வாக்களித்திருக்கவே மாட்டார்கள். அந்த வகையில் கௌரவ பிரதமர் அவர்களே இந்த இரு விடயங்களையும் பொறுத்தவரையில் முதலாவது என்னுடைய கேள்வி இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் அடையாளப்படுத்தப்பட்ட விடயம். உங்களுடைய வெளிநாட்டு அமைச்சர் ஜெனிவாவிற்கு சென்று சொல்லி இருக்கிறார் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை முன் கொண்டு செல்ல போகின்றோம் என்று. பாதிக்கப்பட்ட சமூகமாகிய நாங்கள்தான் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நீதி பொறிமுறை இல்லாத காரணத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்இ அரசாங்க தரப்பின் முன்மொழிவுகளாக இருக்கின்ற அந்த விடயங்களுக்குக்கூட உங்களுடைய வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி இல்லாமல் எவ்வாறு நீங்கள் இந்த விடயங்களை முன்னெடுக்க போகின்றீர்கள்? எங்களுக்குத் தெரியும் சாலிய பிரிஸ் தலைமையிலான அந்த குழு ஒரு சில அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகளை எடுத்து விசாரிக்க போனார்கள். அந்த விடயங்களுக்காவது உடனடியாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்காவிட்டாலும் என்ன நடக்கின்றது? ஏற்கனவே நீங்கள் பிள்ளையானை கைது செய்திருக்கின்றீர்கள். நாங்கள் வரவேற்கின்றோம். விசாரணைகளை செய்து அந்த விடயங்களை நீங்கள் முன்னெடுங்கள்.
பிரதமர் - கௌரவப் பிரதி சபாநாயகர் அவர்களே ... 16 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்கு நாம் பொறுப்புக் கூற முடியாது. நாம் ஆறு மாத காலங்களாகத்தான் ஆட்சியில் இருக்கின்றோம். இந்த காலப்பகுதியில் நாம் சில செயல்முறைகளின் பொறிமுறைகளையும் வலுப்படுத்த வேண்டும். அதற்குரிய நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கான விசாரணைகளை முன்னெடுத்து தான் நீதிகளையும் நியாயங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொன்றையும் விசாரிக்க முடியாது. இதனை நிறுவன ரீதியாக நாம் செயல்படுத்த வேண்டும். நிறுவன ரீதியான தோல்வியானது முறைமை ரீதியான தோல்விக்கு பங்களித்துள்ளது. பிரபலத்திற்காக அவசரப்பட்டு செயற்படாமல்இ இவ்வாறான சம்பவங்கள் மீளவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் விடயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அத்தோடுஇ இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதே எமது முன்னுரிமையாகும். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் மீது மக்கள் ஏன் நம்பிக்கை வைக்கவில்லை? கடந்த காலத்தில் இந்த நிறுவனங்கள் பெயரளவில் அமைக்கப்பட்டதாலும்இ போதிய பலம் பெறாததுமே தோல்விகளுக்கு காரணமாகும். இதுதான் கடந்த காலத்தில் நடந்தது. இதைத்தான் நாங்கள் சரிசெய்துஇ இந்த இடங்களில் சரியான நபர்கள் இருப்பதை உறுதிசெய்துஇ வளங்கள் போதுமான அளவு ஒதுக்கப்பட்டு செயற்படும்போதுஇ இந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த நிறுவனங்கள் போதுமானதாக இல்லாவிட்டால்இ அவற்றின் ஆணையை விரிவுபடுத்தவும்இ புதிய பொறிமுறையை உருவாக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் செய்வோம்இ ஆனால் அது ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும். இவை நிலையானவை என்பதை உறுதி செய்ய வேண்டும்இ அதைத்தான் நாம் சரியாகச் செய்கிறோம். இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் நான் ஏன் குறிப்பிட்ட தகவலைக் கேட்கிறேன் என்றால்இ ஏற்கனவே தொடரும் சில வழக்குகள் உள்ளன. ஏதேனும் குறிப்பிட்ட வழக்குகள் விசேடமானதாக இருந்தால்இ அவற்றையும் நாங்கள் கவனிப்போம். அதன் பிரகாரம்இ நாம் எம்மிடம் உள்ள தகவல்களை வழங்க முடியும். இந்த வழக்குகள் கடந்த 16 வருடங்களாக உள்ளன. அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது. எனினும்இ நாம் நீதியை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ளோம்.
சாணக்கியன் - இங்கு எனது பிரச்சினை என்னவென்றால்இ காணாமல் போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட உண்மையான நிதியாகும். நீங்கள் மக்களிடமிருந்து ஆணையைப் பெற்றீர்கள்இ பிரதமராக நீங்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை நடத்திச்செல்லுங்கள்இ இந்த பாராளுமன்றத்தை நடத்த ஜோக்கர்களை அனுமதிக்காதீர்கள். கௌரவப் பிரதி சபாநாயகர் அவர்களே என்னுடைய இரண்டாவது கேள்வி கௌரவ பிரதமர் அவர்கள் தன்னுடைய உரையிலே எந்த வழக்குகள் பொருத்தமானது என கூறுமாறு என்னிடம் கேட்கின்றார். கௌரவ பிரதமர் அவர்களே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இந்த நாட்டில் நடந்த வன்முறைகள் அனைத்தும் என்னை பொருத்தவரையில் முக்கியமான வழக்குகளே. ஆனால் அரசாங்கம் விசாரிக்க கூடியதை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். இதை தெரிவு செய்யுங்கள் அதை தேர்வு செய்யுங்கள் என்று நான் எவ்வாறு கூற முடியும்? அது வேடிக்கையான ஒரு விடயம். அதிலும் கௌரவ பிரதமர் அவர்களேஇ அரசியல் கைதிகளில் விடுதலை பற்றி பட்டியலை தருமாறு நீங்கள் என்னிடம் கேட்கின்றீர்கள் கேட்கின்றீர்கள். கௌரவ பிரதமர் அவர்களேஇ நீங்கள் தான் இந்த நாட்டின் பிரதமர். நீதியமைச்சர் உங்களின் கீழ்தான் செயற்படுகின்றார். நாட்டில் உள்ள அரசியல் கைதிகளின் பட்டியலை தாருங்கள் என்று அவரிடம் கேளுங்கள். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கூடிய அரசியல் கைதிகள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுடைய பட்டியல்களை உங்களுடைய அமைச்சர்களிடம் நீங்கள்தான் பெறவேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் பதவியை எனக்குத் தாருங்கள். நான் அதனை எடுக்கின்றேன். அரசியல் கைதிகள் விடயத்தில் நீங்கள் தான் கரிசனை காட்ட வேண்டும். கிழக்கிலே மட்டக்களப்பை தவிர்த்துஇ வடக்கு கிழக்கு மக்கள் உங்களுக்கு ஒரு ஆணையை தந்துள்ளனர். அந்த வகையில் இந்த அரசியல் கைதிகளின் பிரச்சனை குறித்து நீங்கள் தான் குறிப்பிட வேண்டும்.
காணி அபகரிப்பு விடயத்தில் கடந்த அரசாங்கம் அபகரித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். கடந்த அரசாங்கம் இந்த காணி அபகரிப்பு விடயங்களிலே முற்று முழுதாக ஈடுபட்ட படியால் தான் அந்த மக்கள் அந்த அரசாங்கத்திற்கு பாரிய பாடம் ஒன்றை புகட்டியுள்ளனர். ஆனால் உங்களுடைய அரசாங்கத்தின் கீழ் எங்களுடைய கௌரவ குகதாசன் ஐயா திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். குச்சவெளி பிரதேசத்தில்இ அதே வேகத்தில் அரச தரப்பினர் காணி அபகரிப்பில் ஈடுபடுகின்றனர். மட்டக்களப்பில் மகாவெலி ஊடாக மேய்ச்சல் தரை பிரச்சினை உள்ளதுஇ வவுனியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றது. உங்களுடைய அரசின் கீழும் காணி அபகரிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அதுதான் இந்த இடத்தில் உள்ள பிரச்சினை.
உங்களுடைய இடது கை பக்கம் இருக்கும் அமைச்சர் சொல்கின்றார் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்த மாட்டோம் எனஇ ஜனாதிபதி கூறுகிறார் மாகாண சபை தேர்தல் இந்த வருடம் நடக்கும் என்றுஇ இந்த வருடம் இன்னொரு தேர்தல் உள்ளது என்றும்இ அதற்கு பின்னர்தான் அரசியலமைப்பை கொண்டு வருவோம் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள்.
பிரதி சபாநாயகர் – கௌரவ உறுப்பினர் அவர்களே உங்களுடைய கேள்வி தெளிவாக உள்ளது. அதனை நீங்கள் முடியுங்கள். ஏற்கனவே நீங்கள் உங்களுடைய இரண்டாவது வினாவை கேட்டு விட்டீர்கள். கேள்வி தெளிவாக காணப்படுகின்றது. பிரதம அமைச்சர் அவர்களே நீங்கள் அதற்கு பதிலளியுங்கள். இது என்னுடைய இரண்டாவது வினா என குறிப்பிட்டு நீங்கள் கேள்வியை கேட்டீர்கள்.
சாணக்கியன் - நான் இந்த கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளேன். பிரதி சபாநாயகர் - நீங்கள் உங்களுடைய கேள்வியை சுருக்கமாக கேளுங்கள். நான் ஒரு நாளும் அநீதியாக நடந்து கொள்ள மாட்டேன் இந்த சபையில் எல்லோருக்கும் நீதியாகத்தான் நடந்து கொள்கின்றேன்.
சாணக்கியன் - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே… ஒவ்வொரு புதன்கிழமையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதம அமைச்சரிடம் கேள்வி கேட்க முடியும். எனக்கு முடிப்பதற்கு ஒரு நிமிடம் தாருங்கள். அமைச்சர் ஒவ்வொரு கதையை கூறுகின்றார். இந்த பாராளுமன்றத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கூட இலவசமாக ஓசியில் வந்த உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ள பார்க்கின்றார்கள். நாங்கள் வாக்குகளை பெற்று வந்தவர்கள் அமைச்சரே… அந்த வகையில் இந்த புதிய அரசியலமைப்பை மிக விரைவாக கொண்டு வருவதற்கு செயற்படுங்கள். ஏனென்றால் இந்த அரசாங்கத்தில் வரவு செலவுத் திட்டத்தில் கூட புதிய அரசியலமைப்புக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவேஇ புதிய அரசியலமைப்பை மிக விரைவாக கொண்டு வருவதற்கு நிதியையாவது ஒதுக்குவீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி
பிரதமர் - நான் முன்னர் குறிப்பிட்டது போன்று என்னுடைய விடையிலேயே நாங்கள் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம் என கூறினேன். நாங்கள் மாகாண சபை தேர்தலையும் நடத்த வேண்டும். இது பல வருடங்களாக நிலுவையில் காணப்படுகின்றது. அதற்குப் பிறகு நாங்கள் புதியதொரு அரசியலமைப்பு தொடர்பான வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம். நாங்கள் இது தொடர்பான விடயங்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. காரணம்இ நாம் மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டியுள்ளது. இது தொடர்பான அவசரத் தன்மையை நாம் அறிவோம். ஆனால் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஏனைய விடயங்கள் காணப்படுகின்றன. நாங்கள் அவற்றிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்இ மக்கள் தற்போதைய நிலைமையிலே ஜனநாயகத்தில் பங்கு கொள்கின்றார்களா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக தற்போதைய சூழலில் மக்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது புதிய அரசியலமைப்பிற்கு முக்கியமானதுஇ ஏனெனில்இ குறிப்பாக இது வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆண்டுகளாக மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது. அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே இதுவும் முன்னுரிமை என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் முதன்மையான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அத்தோடுஇ கௌரவ உறுப்பினரின் வார்த்தை பிரயோகத்தில் எனக்கு ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. அதாவது பாராளுமன்றத்திற்கு ஒவ்வாத வகையில் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது அவசியமற்ற ஒன்று. பிரதி சபாநாயகர் அவர்களேஇ நீங்கள் இவ்வாறான விடயங்களில் தலையிட வேண்டும் என்றும்இ பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணான விடயங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
4/11/2025 01:51:00 PM
பாராளுமன்றத்தில் பிரதமருடனான கேள்வி பதிலின் போது...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: