News Just In

4/22/2025 05:19:00 PM

இலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்க விலை..!

இலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்க விலை..!




அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

அந்தவகையில் இலங்கையிலும் அதன் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,035,976 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,550 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 292,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 268,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: