உள்ளூர் வீதிகள் பற்றி இரா சாணக்கியன் பாராளுமன்றத்தில் அமைச்சரிடம்..!
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது 10.04.2025. பொதுநிர்வாகம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரிடம் கேட்பதற்கு.
கௌரவ அமைச்சர்களே நீங்கள் குறிப்பிட்ட அந்த வீதியில் அம்பிலாந்துறை பாதையானது 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் உள்வாங்கப்பட்ட ஒரு வீதி. உலக வங்கி திட்டத்தின் கீழேயே அதனை புனரமைப்பு செய்வதாக குறிப்பிட்டீர்கள். அவ்வாறாயின் அது சம்பந்தமாக எங்களுடைய ஏனைய போரதீவுப்பற்று பிரதேச சபையிலேஇ உங்களுக்கு தெரியும் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு இதுவரை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்கூட நடத்தப்படவில்லை. உங்களுடைய அரசாங்கம் வந்து ஆறு மாத காலமாக போகின்றது. இதுவரை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்கூட நடைபெறவில்லை. இந்த போரதீவுப்பற்று பிரதேச சபையில் இருந்துதான்இ பக்கியால வீதி என்பதுஇ வெள்ளாவெளியில் இருந்து பக்கியால - உகன வீதி வரைக்கும் போகும் வீதிதான் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த வீதிக்கு 30 மில்லியன் ரூபாய் இந்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் கௌரவ அமைச்சர் அவர்களே ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தின் உரையிலேஇ வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு 11 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டது. அதில் 5 பில்லியன் வட மாகாணத்திற்கு என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் ஆறு மில்லியன் ரூபாய் தான் நாட்டின் மொத்த அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட போகின்றது. இந்த ஆறு பில்லியனையும் நாங்கள் 25 மாவட்டங்களுக்கு பிரித்துப் பார்த்தால் அண்ணளவாக பிரித்தால் ஒரு மாவட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாய் வருகின்றது. அதில் கடந்த கால வரலாறை பார்த்தால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியில் 55 சதவீதம் தான் வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின்இ 150 மில்லியன் அளவில் தான் மாவட்டத்திற்கு வரக்கூடியதாக உள்ளது. அதாவது சமனாக பிரித்தால்இ அதாவது கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்கும் சமனாக பிரித்தால் அந்தளவு வரும். அப்படி நடக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்த பிரதான வீதி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. அண்மையில் ஒரு அம்பியுலன்ஸ் வண்டி போகமுடியாமல் அங்கு மண்ணை நிறைத்து அதன் பின்தான் வாகனம் சென்றது. கடந்த மாதத்தில் உங்களுடைய அமைச்சின் கீழ் நாங்கள் ஒரு கேள்வியை கேட்டிருந்தோம். அது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என உங்களுடைய அமைச்சரவை அமைச்சர் கூறி இருந்தார். உங்களுடைய மாகாண சபைகள் அமைச்சினூடாக இந்த வீதியை உடனடியாக புணரமைப்புச் செய்யக்கூடிய வகையான ஏதேனும் ஏற்பாடுகளை செய்ய முடியுமா?
அ - ரோமன் இலக்கம் ii - கொக்கட்டிச்சோலை அம்பிலாந்துறை வீதியானது பட்டிப்பளை சந்தையில் ஆரம்பித்து அரசடித்தீவு - கடுக்காமுனை ஊடாக அம்பிலாந்துறை சந்தையில் முடிவடைகின்றது. இதன் நீளம் 5.98 கிலோமீட்டர்கள் ஆகும். கற்களிடப்பட்டு தாரிடப்பட்டிருந்த இந்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதன் காரணமாகஇ உலக வங்கியினால் நிதி வழங்கப்பட்டு இணைத்தொடர்பு வீதி கருத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வீதியை இரு வழி பாதைகளைக் கொண்ட வீதியாக புனரமைப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வீதியின் ஒருவழிப் பாதையின் அகலம் 3.1 மீட்டராகும். பிளக்ஸிபல் பேமண்ட் வீதியாகவும் ஒருசில பகுதிகள் ரிஜித் பேமண்ட் கொங்கிறீட் வீதியாகவும் மாற்றி புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது .
இரண்டு - வில்லுக்குளம் வீதி. கொக்கட்டிச்சோலை - அம்பிலாந்துறை வீதி என்று அழைக்கப்படுகின்ற இந்த வீதியானதுஇ மணல்பிட்டி சந்தியில் ஆரம்பித்து கடுக்காமுனை வாவி வில்லுக்குளம் எல்லையுடாக பயணித்துஇ தாமரைப்பூ சந்தியில் அம்பிலாந்துறையில் முடிவடைகின்றது. இதன் முழுத் தூரம் 4.43 கிலோமீட்டர் ஆகும். இதில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கொங்கிறீட் இடப்பட்டுள்ளது. 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கற்களிடப்பட்டு தாரிடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி பரல் கற்கள் வீதியாக காணப்படுகின்றது. இந்த வீதியில் தாரிடப்பட்ட பகுதியானது கடந்த காலத்தில் கிராமிய வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ரிஜிட் பேமெண்ட் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டது. எஞ்சிய பகுதியை கட்டம் கட்டமாக புனரமைப்பு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கானஇ இந்த வருடத்தில் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மூன்றாவது பக்கியல்ல வீதி. இது திவுலான -வெல்லாவெளி வீதி என அழைக்கப்படுவதுடன்இ இது 13.2 கிலோமீற்றர் தூரமானதாகும். இதில் 3.2 கிலோமீற்றர் தூரமானதுஇ வளைவுகளைக் கொண்டுள்ளது. 4 கிலோமீட்டர் தூரத்துக்கு கொங்கிறீட் இடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி னுடீளுனுஐ கொண்டதாக 13 வருடங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டது. தற்போது இந்த வீதி சேதமடைந்துள்ளது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளை முகாமைத்துவம் செய்துகொண்டுஇ இந்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு 2025ஆம் ஆண்டு 31 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு நிதியத்தின் உடாக னுடீளுனு வீதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீதியின் 500 மீற்றர் அளவான பகுதியை ரிஜிட் பேமண்ட் கொங்கிறீட் வீதியாக படிப்படியாக புனரமைப்புச் செய்வதற்கும்இ 5 கிலோமீற்றர் அளவை போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஊடாக கிழக்கு கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆ – மேலே பதிலளிக்கப்பட்டுள்ளது. இ – அமைச்சுடன் தொடர்புபட்டதல்ல.
அமைச்சர் அவர்களின் பதில் - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களேஇ அவர் குறிப்பிட்ட இந்த வீதி சம்பந்தமான பிரச்சினையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தொல்பொருள் விடயங்கள் காணப்படுகின்ற இந்த பக்கியல்ல வீதி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. எனவே அந்த விடயங்களுக்காகஇ நிதி அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கி இருக்கின்றார். அதற்கமைவாக நாம் செயற்பட்டு வருகின்றோம். பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கான தவிசாளர்களை நியமித்துள்ளோம். அவற்றை ஒன்றுகூட்டுவது தொடர்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் நாம் அது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
கௌரவ அமைச்சரே உங்களுடைய பதிலானது வரவேற்கத்தக்க பதில். உண்மையில் அந்த பிரதேசத்தின் நிலைமையை தெளிவாக ஆராய்ந்து அந்த பிரதேசத்தின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். அது வரவேற்கத்தக்க விடயம்.
இது என்னுடைய இரண்டாவது கேள்வி. நாங்கள் உங்களிடம் கேள்வி எழுப்பியது இரண்டு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அம்பிலாந்துறை - வில்லுக்குளம் - போறதீவுப்பற்று வீதிகளைத்தான் நான் குறிப்பிட்டேன். அதேபோலத்தான் உன்னிச்சையிலிருந்து பாவற்கொடிசேனைக்குப் போகும் பாதைஇ வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவிலே இருக்கின்றது. அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. அந்தப் பாதையும் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. அதேபோலத்தான் கிரான் பிரதேச செயலகத்தில்இ கிரான் புலிப்பாய்ந்தகல் பிரதேசத்திற்கு போவதற்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. கௌரவ அமைச்சர் அவர்களே மாகாண அமைச்சினூடாக இந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில்இ கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு எவ்வளவு? கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? ஏனென்றால் கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்று கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் கிழக்கு மாகாண சபையின் ஊடாக நடைபெறவிருக்கும் வேலைத்திட்டங்கள் பற்றி கிழக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளான நான் உட்படஇ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் போன்ற எவருக்கும் தெரியாது. கிழக்கு மாகாண சபையின் நிதி எதற்கு ஒதுக்கப்படுகின்றது என்று எங்களுக்கு தெரியாது. அவர்கள் முன்மொழிவுகளை தயார்படுத்தி அனுப்புகிறார்கள் என்றால் மாகாண சபை இயங்குநிலையில் இல்லை. எனவே மாகாண சபை தேர்தலை நடத்தினாலாவது மக்கள் பிரதிநிதிகளான நாங்களாவது நிதியை திரட்டலாம். மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு காலம் செல்லும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.. எனவே கிழக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அதில் மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அதில் இந்த உன்னிச்சைஇ பாவற்கொடிச்சேனைஇ கிரான் போன்ற வீதிகளையும் உள்ளடக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமா? நன்றி.
அமைச்சர் அவர்களின் பதில் - கௌரவ பிரதி தவிசாளர் அவர்களே - அவர் முன்வைத்த கேள்வி நான் நினைக்கின்றேன் மாவட்ட அபிவிருத்திக் குழுவிலே கூடி கலந்துரையாடக்கூடிய விடயமாக இருக்கின்றது. நிதி ஒதுக்கீடு பற்றிய புள்ளி விபரங்களை கேட்டிருக்கின்றார். அவை தொடர்பான விபரங்கள் தற்போது என் கைவசம் இல்லை. அதனை என்னால் சமர்ப்பிக்க முடியும். அந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக மாவட்டத்திற்கும்இ குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதி பற்றிஇ மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலே வெவ்வேறாக அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். எனினும் நாங்கள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். இதுவரை காலமும் பிரதான பாதைகளுக்குத்தான் நிதி ஒதுக்கப்பட்டிருந்தன என்பதை நாமறிவோம். அதில் தவறில்லை. என்றாலும் கூட கிராமப்புறங்களில் இருக்கின்ற பாதைகள் சேதமடைந்துள்ளன. நீங்கள் வாழும் மாவட்டத்தைப் போலத்தான்இ நாம் வாழும் புத்தளம் மாவட்டத்திலும் கிராமிய வீதிகள் பாரியளவு சேதமடைந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக படிப்படியாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments: