மாணவர்களிடையே சனநாயக மரபுகளை மதித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூக விஞ்ஞான பாடத்தின் இணைப்பாடவிதான செயற்பாடான மாணவர் பாராளுமன்றத்தை உருவாக்கும் பொருட்டு மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.சி.நஸ்லின் றிப்கா அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் மாணவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அமீர் ஹுசைன் அவர்களின் தலைமையில் மிக நேர்த்தியாக இடம்பெற்றது. இச்செயற்பாட்டினை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் சிறப்பாக திட்டமிட்டு நடாத்தினர்.
இந்த தேர்தல் நடவடிக்கையினை வலயத்தின் வலய பாராளுமன்ற இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம். மௌசூர், சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்களான முஹம்மட் தையூப், ஜுலூல் மற்றும் ஆங்கில பாடத்துக்கான வலய இணைப்பாளர் எம்.ஆரிப் அவர்களும் கண்காணிப்பு செய்தனர் .
இத்தேர்தல் நடிவடிக்கை செயற்பாடுகளுக்கு பிரதி அதிபர். ஐ எம். எஃப். மர்சுனா, உதவி அதிபர் அப்துல் கபூர் அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்தனர்.
No comments: