News Just In

4/01/2025 07:24:00 AM

சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வைத்தியர் கைது!


சொகுசுகாரில் ஐஸ்போதைப்பொருள்பாவித்துக்கொண்டிருந்த 
வைத்தியர் கைது!



மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில் , ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வைத்தியரின் நண்பரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மாத்தறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியரிடம் இருந்து 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் அவரது நண்பரிடம் இருந்து 2100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் வந்த சொகுசு கார் மற்றும் அவரது மருத்துவ உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments: