News Just In

4/17/2025 11:49:00 AM

கைலாசாவாக செஞ்சோலை சிறுவர் இல்லம்! கே.பியின் முகத்திரையை கிழித்த பெண்!

கைலாசாவாக செஞ்சோலை சிறுவர் இல்லம்! கே.பியின் முகத்திரையை கிழித்த பெண்


செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் நிர்வாக சீர்கேடுகள் அதிகளவில் இடம்பெறுவதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் வடமாகாண பணிப்பாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் செல்லப்பிள்ளையான குமரன் பத்மநாதனுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை என்றும் செஞ்சோலைக்கும் குமரன் பத்மநாதனுக்கு என்ன தொடர்பு என்று அவர் கேள்வி எழுப்பினர்.

போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று கைலாசா போன்று உள்ளதாக விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் குறிப்பிட்டார்

No comments: