முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன் தெரிவிப்பு!
அபு அலா
சுமார் 40 ஆண்டு காலமாக எந்தவொரு அரசியல் அதிகாரமும் இல்லாமல் கவனிப்பாரற்றுக் கிடந்தபொத்துவில் பிரதேச மக்களுக்கான அதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் கிடைக்கப்பெற்றதை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் உதவித் தவிசாளருமான ஏ.எம்.எம்.தாஜூதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச மத்திய குழுத் தலைவர் வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸத்தீன் தலைமையில் பொத்துவில் பிரதேச கிளைக் காரியாலய திறப்பு விழாவும், பொதுமக்கள் சந்திப்பும் (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேசத்திற்கு 40 வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற அந்த பாராளுமன்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு கட்சிக்கும், அதன் தலைமைக்கும் எதிரான செயற்பாடுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் உள்ளிட்ட அவரைச் சார்ந்த குழுவினர் ஈடுபட்டனர்.
கட்சியையும், அவரையும் நம்பி வாக்களித்த எமது மக்களுக்கு, அவர் செய்த துரோகத்தனத்தை சொல்லால் வர்ணிக்க முடியாது. அந்தளவிற்கு துரோகத்தை செய்துவிட்டார்.அதை ஏற்றுக்கொள்ள முடியாதளவு இருந்த எமது மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் நல்லதொரு பாடத்தை அவருக்கு கற்பித்துக் கொடுத்தனர்.
நம்பிக்கைக்கு துரோகம் செய்தவர்கள் ஒருபோதும் நிலையாய் நின்ற வரலாறு கிடையாது. இப்போது முஷாரப் எங்கே? அவரின் குழுவினர் எங்கே? அவரும் அவரின் குழிவினரதும் நாமத்தை மக்கள் அடியோடு அழித்துவிட்டனர்.
பொத்துவில் பிரதேச மக்கள் முஷாரப் என்ற ஒரு தனி நபருக்காக ஒருநாளும் இல்லை என்பதையும், கட்சிக்காகவே உள்ளனர் என்பதையும் மிகத் தெளிவான பதிலடியை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எடுத்துக் காட்டினார்கள். அதேபோன்று இந்த பிரதேச சபைத் தேர்தலிலும் காட்டவுள்ளனர் என்றார்.

No comments: