நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு சோலார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை மின்சார கட்டண பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 லட்சம் பெறுமதியான சோலார் சிஸ்டம் சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் மேல்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் நிறைவு பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த இந்த சோலார் சிஸ்டம் பொருத்தும் வேலைத்திட்டத்தினால் பள்ளிவாசல் மாதாந்தம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்திவந்த மின் பட்டியல் கட்டணம் 85 ஆயிரம் இப்போது இல்லாமலாகி எவ்வித கட்டணமும் இப்போது நாங்கள் செலுத்துவதில்லை என்றும் இந்த சோலார் மூலம் மாதாந்தம் 70-75 ஆயிரம் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக வருமானமாக வருவதாகவும் இந்த வருமானத்தினூடாக பள்ளிவாசலின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இப்படியான நிலையான வருமான மூலங்கள் கிடைக்க உதவிய முன்னாள் எம்.பி எச்.எம்.எம். ஹரீஸுக்கு நன்றிகளையும் தமது பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாக சபை தலைவர் பொறியியலாளர் எம்.ஐ. நஸீர் இதன்போது தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments: