கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற ஈழத்தமிழர்
கனடாவின் நீதி அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் -இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(14) மார்க் கார்னி தனது முதல் அமைச்சரவையை வெளியிடும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும், இதன் மூலம் அவர் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியராக என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு வழக்கறிஞரும் தமிழர் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் ஆனந்தசங்கரி, இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டது கனடாவிலும் உலகளவில் தமிழ் சமூகத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.
ஈழத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கத்திய அரசாங்கத்தில் இவ்வளவு மூத்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம்.
பொறுப்புக்கூறலுக்காக இலங்கை மீது சர்வதேச அழுத்தம் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் அவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.
3/15/2025 05:22:00 AM
கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற கேரி ஆனந்தசங்கரி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: