News Just In

3/11/2025 09:02:00 AM

ஈழத்தமிழ் மக்களுக்காக லண்டனில் வெடித்த போராட்டம் !

ஈழத்தமிழ் மக்களுக்காக லண்டனில் வெடித்த போராட்டம் !


லண்டனில் (London) தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம கடந்த கடந்த பத்தாம் திகதி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் (Sri Lankan High Commission) முன்பாக இடம்பெற்றுள்ளது.

The Freedom Hunters For Tamils மற்றும் TGTE இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில், தமிழர்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறையை எடுத்துக்காட்டவும் மற்றும் தமிழ் மக்களுக்கான நீதியை கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறும் முகமாக தமிழ் பெண்கள் இன்றளவும் எதிர்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வலியுறுத்தியும் இந்த பேராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களால் ஆர்ப்பாட்டமொன்று கடந்த மூன்றாம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் தமிழினத்தின் மீதான இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறை நகர்வுகளுக்கு நீதிகோரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: