News Just In

3/21/2025 01:26:00 PM

சிறையில் நிர்வாணமாக்கப்பட்டாரா தேஷபந்து?

சிறையில் நிர்வாணமாக்கப்பட்டாரா தேஷபந்து?


இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவார் என வழக்கறிஞர் சானக அபயவிக்ரம கூறியுள்ளார்.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கும் அது நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

மற்ற கைதிகளைப் போலவே குறைந்தபட்ச வசதிகள் சிறைக்குள் தேசபந்துவுக்கு கிடைக்கும் என்றும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அணியும் ஜம்பரை அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் வழக்கறிஞர் சானக அபயவிக்ரம கூறினார்.

சிமெண்ட் தரையில் தூங்க வேண்டியிருக்கும் என்றும்மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பாய் அல்லது மெத்தை பெற முடியும் என்றும் சானக அபயவிக்ரம , கூறினார்.

ஆனால் வெளியில் இருந்து உணவு உண்ண முடியும் என்றும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகள் அல்லது பிற சுகாதாரத் தேவைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட காவல்துறை தலைவர் தேஷபந்து தென்னகோன் நேற்று மாலை தும்பர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

No comments: