வடக்கில் முதன்முறையாக இடம்பெறும் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களிற்கான பயிற்சி முகாம்..!
வடமாகாணத்தில் முதன்முறையாக பூப்பந்தாடட் பயிற்சியாளர் தரம் ஒன்றிற்காக நான்கு நாட்கள் பயிற்சி முகாம் இன்றையதினம்(12) வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பயிற்சி முகாமானது வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, பூப்பந்தாட்ட பயிற்சி மேம்பாட்டு சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது இலங்கை பூப்பந்தாட்ட பயிற்சி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் புத்திக்க டி செல்வா, வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் தே.கமலன், ஓமந்தை விளையாட்டு மைதான இணைப்பாளர் தனுராஜ், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்புக்கு வெளியே முதன்முறையாக இடம்பெறும் இப்பயிற்சி முகாமில் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
2/12/2025 01:28:00 PM
Home
/
Unlabelled
/
வடக்கில் முதன்முறையாக இடம்பெறும் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களிற்கான பயிற்சி முகாம்..!
வடக்கில் முதன்முறையாக இடம்பெறும் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களிற்கான பயிற்சி முகாம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: