News Just In

2/21/2025 07:24:00 AM

மொஹமட் அஸ்மான் மற்றும் செவ்வந்தியின் பின்னணியில் சிக்கல்கள்!

மொஹமட் அஸ்மான் மற்றும் செவ்வந்தியின் பின்னணியில் சிக்கல்கள் 


சர்ச்சையை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சிக்கிய மொஹமட் அஸ்மான் என்பவர் ஒரு முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி என சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டப் புத்தகத்தை வைத்துக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்ட செவ்வந்தி என்ற பெயர் கொண்ட பெண்ணின் உண்மையான பெயர் இதுவரை தெரியவில்லை.

எனினும், குறித்த பெண் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தவர்களுக்கு ஏன் செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை என சிராஸ் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

No comments: