News Just In

2/27/2025 10:20:00 AM

பாராளுமன்ற அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக சத்தியலிங்கம் நியமனம்..!

பாராளுமன்ற அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக சத்தியலிங்கம் நியமனம்..!




பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: