News Just In

2/05/2025 11:12:00 AM

குறைக்கப்படும் நீர் கட்டணம்!


குறைக்கப்படும் நீர் கட்டணம்!




இலங்கையில் நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண குறைப்போடு சேர்த்து, நீர் கட்டணங்களையும் குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

No comments: