வரவு செலவுத்திட்டத்துக்கு தமிழர் பகுதியில் பெருகும் ஆதரவு
இலங்கை ஜனாதிபதியினால் நேற்றையமுன் தினம்(17) 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வரவுசெலவுதிட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. யாழ்ப்பாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலங்களே ஆன நிலையில் இவ்வாறு சிந்தித்து செயற்பட முடியுமெனில் ஏன் இவ்வளவு நாளாக இருந்த தலைவர்களால் முடியவில்லை என தமிழ் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும், அதனை தொடர்ந்து அநுர குமாரவிற்கு தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2/19/2025 10:17:00 AM
வரவு செலவுத்திட்டத்துக்கு தமிழர் பகுதியில் பெருகும் ஆதரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: