
நாட்டில் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மழையுடன் காலநிலையினால் நுளம்புகள் பெருகியதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக ஆரம்ப நாட்களில் கடுமையான காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் தசை வலி, மூக்கு கருமையாதல் மற்றும் தோலில் ஆங்காங்கே கருப்பு புள்ளிகள் தோன்றுதல் என்பன ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக, சிக்குன்குனியா நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments: