News Just In

2/13/2025 02:52:00 PM

இலங்கையில் காற்றலை திட்டத்தை நிறுத்திய அதானி!

இலங்கையில் காற்றலை திட்டத்தை நிறுத்திய அதானி!
 


இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு இது குறித்து அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து கௌரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என்றும், இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்களுக்காக தமது நிறுவனம் திறந்திருப்பதாகவும் அதானி குழுமம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: