News Just In

2/07/2025 01:10:00 PM

ரஷ்யா இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது?

ரஷ்யா இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது?



ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ரஷ்ய ராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பிலும் மரணமடைந்தவர்களின் பட்டியலை வெளியிட முடியுமா எனவும் சிறிதரன் எம்.பி கேள்வி எஎழுப்பினார்.

No comments: