News Just In

1/26/2025 10:20:00 AM

பொத்துவில் கோட்டத்தில் அஸ்ஸாதீக் வித்தியாலயம் சாதனை!

பொத்துவில் கோட்டத்தில் அஸ்ஸாதீக் வித்தியாலயம் சாதனை!



அபு அலா
2024ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பொத்துவில் கோட்ட அஸ்ஸாதீக் வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் சித்தியடைந்து புலமைப்பரிசிலுக்கு தெரிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பொத்துவில் கோட்டத்திலிருந்து சுமார் 37 மாணவர்கள் தெரிவாகி இருந்தனர். அதில் அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் 14 பேர் அஸ்ஸாதீக் வித்தியாலயத்திலேயே சித்தியடைந்து தெரிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.சிஹாப்தீன், பாடசாலை வலயக் கல்விப் பணிப்பாளரின் பிரதிநிதியும், ஆரம்ப கல்வி இணைப்பாளருமான ஏ.எம்.எம்.தாஜுதீன் மற்றும் கற்பித்த ஆசிரியர் எம்.கே.அஸ்வத் ஜெயின் ஆகியோர் புலமைப் பரிசிலுக்கு தெரிவாகிய மாணவர்களுடன் காணப்படுகின்றனர்.

No comments: