News Just In

1/25/2025 05:42:00 PM

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு!

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று (25) யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை நடாத்துகிறது.

இம்மாநாடானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் , தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிபதிகள், நீதவான்கள், சட்டத்துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

No comments: