(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமீபத்திய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கனமழை பெருவெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியுள்ள திண்மக் கழிவுகளை சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இயற்கை நேச ஆர்வலர்களான மாவட்ட மற்றும் பிரதேச இளைஞர் சம்மேளன இளைஞர் யுவதிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாவியோரமாக அமைந்துள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் சுற்றயல்பகுதி இயற்கை நேச ஆர்வலர்களான இளைஞர் யுவதிகளால் சிரமதானத்தின் மூலம் சனிக்கிழமையன்று சுத்தம் செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கு “நீர்கொழும்பு மறுசுழற்சி நிலையம்” ஆதரவு வழங்கியுள்ளது.
சிரமதானத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 300 கிலோவுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொலித்தீன் கழிவுகள் மீள் உற்பத்தி நடவடிக்கைக்காக நீர்கொழும்பு மீள் உற்பத்தி மையத்திற்கு கையளிக்கட்டதாக செயற்பாட்டார்கள் தெரிவித்தனர்.
சிந்திக்காமல் நீர் நிலைகள், வடிகான்கள், கால்வாய்கள், வாவியோரங்கள், கரையோரங்கள், தெருமருங்குகள் ஆகிய பொது இடங்களில் வீசப்படுகின்ற பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் காரணமாக நிலமும் நீரும் மாசடைகிறது.
அதனால் மனிதர்கள் உட்பட கால் நடைகள், பறவைகள், ஊர்வன, நிலக்கீழ் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறாக இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டே முறையான கழிவகற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொலித்தின் உட்பட திண்மக் கழிவுகள் பெருமளவில் சேகரிக்கப்பட்டன.
இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் சூழலை மாசுபடுத்தாமல் பேணிப் பாதுகாக்கும் வகையில் திண்மக் கழிவுக் குப்பைகளை அகற்றும் செயல்திட்டத்தை அனைவரும் தமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக் வேண்டும் என இயற்கை நேச ஆர்வலர்களான இளைஞர் யுவதிகள் தெரிவித்தனர்.
இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்கும் தூர நோக்கை அனைவரும் சிந்தனை செயற்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments: