யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா) இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டபோது, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும், வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
மேலும், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல இன்னல்களை சந்திப்பதாகவும், பல முறைப்பாடுகளை தன்னிடம் வழங்கி தீர்வு பெற்றுத் தருமாறு கோரியதாகவும் எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்
No comments: