News Just In

12/04/2024 05:53:00 PM

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தும் அநுர அரசாங்கம்..!நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தும் அநுர அரசாங்கம்..!




அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய அரசியல் கைதிகள் இன்றும் விடுதலை செய்யப்படாத நிலையில் சிறையில் இருக்கின்றார்கள்.

இவர்கள் ஆரம்பத்திலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பல்வேறு வழக்குகளின் கீழ் உள்ளார்கள்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் விடயம் யாதெனில், இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவது மட்டுமன்றி உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.

இது இவ்வாறிருக்க, தொல்பொருள் திணைக்களத்தினாலே இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. ஆனால், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள்.

அந்தவகையிலே, குரூந்தூர் மலையாக இருக்கட்டும், வெடுக்குநாறி மலையாக இருக்கட்டும், திரியாய் பிரதேசமாக இருக்கட்டும் இந்த பிரதேசங்களிலே தொல்பொருள் பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

No comments: