News Just In

12/24/2024 12:50:00 PM

அரச உறுப்பினர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு எவ்வித தடையும் இல்லை! அமைச்சர் அறிவிப்பு

அரச உறுப்பினர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு எவ்வித தடையும் இல்லை! அமைச்சர் அறிவிப்பு




அரசாங்க உறுப்பினர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்சியின் அனுமதி தேவை எனக் கூறி நீதியமைச்சர் நேர்காணலை நிராகரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,

எமது எம்.பி.க்கள் எவருக்கும் கருத்துத்தடை இல்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளவர்கள் .

இருப்பினும் செயல்முறை நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது முடிவுகளைத் தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments: