News Just In

12/10/2024 12:55:00 PM

தினேஷ் படுகொலையோடு தொடர்புடைய ஸஹ்ரான் குழுவினரை : அடையாளம் காணமுடியாத அரசாங்கம் - கோடீஸ்வரன்

தினேஷ் படுகொலையோடு தொடர்புடைய ஸஹ்ரான் குழுவினரை : அடையாளம் காணமுடியாத அரசாங்கம் - கோடீஸ்வரன்



தினேஷ் கணேஸ் இன் படுகொலையோடு தொடர்புடைய ஸஹ்ரான் குழுவினரை.

இன்றுவரை அடையாளம் காண முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கணேஷ் தினேஷ் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு.

காவேரி விளையாட்டுக் கழகத்தினரும் இளைஞர்களும் சேர்ந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை பெரியநீலாவணையில் இன்று (08) ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு

உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

இந்த நிகழ்விலே கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் இதில் பங்குபற்றி இருக்கின்றார்கள் அத்துடன் கூடுதலான இளைஞர்கள் இந்த நிகழ்விலே பங்குபற்றி இருக்கின்றார்கள் என்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

அத்தோடு தினேஷ் அவர்களின் படுகொலையோடு தொடர்புடைய சகுரான் குழுவினரை இன்றுவரை அடையாளம் காண முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது. கடந்த காலங்களிலே காணப்பட்ட குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்வதாக தற்காலத்தில் காணப்படுகின்ற அரசாங்கம் இல்லை.

ஈஸ்டர் குண்டு தாக்குதலோடு தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பது மற்றும் அவர்களுக்கான தண்டனை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை இல்லாத தங்களுடைய செயற்பாடுகள் மந்தகதியிலே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதற்கான சூத்திரதாரியை அடையாளம் கண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களுக்கான தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என்று இந்த இடத்திலே கூற விரும்புகின்றோம்.

குறிப்பாக தினேஷ் அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன் எங்களது வவுணதீவு பிரதேசத்திலே சஹ்ரான் குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

சுட்டு கொல்லப்பட்டதற்கான நியாயமானது அதற்கான தீர்வானது இன்று வரை கிடைக்கப்படாத துர்ப்பாக்கிய நிலையில் எங்களது மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

அதற்கான நீதியை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அதற்கான தண்டனையை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதனை ஒட்டியதாக இன்று ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த இரத்ததான நிகழ்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்

No comments: