இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 'கிளீன் ஸ்ரீ லங்கா' செயலணியில் இராணுவத்தினர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயலியின் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு துறை சார்ந்தோர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறானதொரு ஜனநாயக வேலைத்திட்டத்தில் இராணுவத்தினரின் தேவை என்ன என்பது ஒரு கேள்வியாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல் ஒன்று இல்லாத இந்த காலப்பகுதியில், இராணுவத்தினர் செயலணியில் இடம்பெறத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
12/22/2024 11:03:00 AM
இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: