மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் உளநல மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசின் நிதி அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபை (UNFPA) நிறுவனமும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் (SLRC) நிறுவனமும் இணைந்து புனர்நிர்மாணம் செய்யப்பட்ட உளநல மையத்தை திறந்து வைத்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி டான் சௌந்தரராஜன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா ஜுலேகா, ஐக்கிய நாடுகள் சபையின் (ருNகுPயு) இலங்கைக்கான பிரதிநிதி முரடெந யுனநnலைi மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ளுடுசுஊ) உப தலைவர் ஜெகத் அபேயசிங்க (துநாயவா யுடியலயளiபெயா), பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல் தொடர்பாடலுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் நவலோஜிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்ட உளநல மையத்தின் ஒப்படைப்புச் சான்றிதழ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியினால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவர், இளம்பருவத்தினர் நட்புச்சூழல், ஆலோசனை பரிந்துரை மையம், மனநல நுகர்வோர் அமைப்பு, மனநல தன்னார்வ தொண்டர் அமைப்பு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த உளநல மையம் அமைந்துள்ளது.
உளவியல் சமூக மையம், சமூகத்தின் மனநலம்;, உளவியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய மையமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படுவதுடன், இங்கு குடும்ப ஆலோசனை, இளம்பருவ மனநல ஆதரவு, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்வி போன்ற இளம் பருவத்தினருக்கான நட்பு சேவைகள், தற்கொலைத் தடுப்பு, பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற சிக்கல்களுக்கான நெருக்கடித் தலையீடுகள் உட்பட பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது
No comments: