News Just In

11/15/2024 06:49:00 PM

இலங்கை வரலாற்றில் முதன் முறை நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!

இலங்கை வரலாற்றில் முதன் முறை நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!




நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.

12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து அம்பிகா சாமுவேல், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஸ்ணன் கலைச்செல்வியும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மலைய பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்புமுனையாக உள்ளது .

அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: