News Just In

11/28/2024 12:47:00 PM

க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு



சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மோசமான காலநிலை காரணமாக மேலும் 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறாது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 6 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது

No comments: