News Just In

11/13/2024 07:16:00 PM

யாழில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மனம் திறந்த வாக்காளர்கள்..!

யாழில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மனம் திறந்த வாக்காளர்கள்..!


நாடாளுமன்றத் தேர்தல் நாளை (13) நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) வாழும் மக்கள் தேர்தலை எதிர்கொள்வதை குறித்து பலவாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில், “நாடாளுமன்றத் தேர்தலிலே நாங்கள் படித்தவர்களை தேர்வு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதற்கு முக்கிய காரணம் மக்களுக்குரிய அரசியல் தீர்வுகள் தொடர்பில் கதைத்து எங்களுடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையினாலே ஆகும்.

ஆனால் இவர்கள் இன்று சிதறுண்டு போய் நிற்பதனால் பேரம் பேசும் அரசியலுக்குள் செல்ல முடியாதுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் ஒருமித்து நின்று குரல் கொடுத்தால் மாத்திரமே எமக்கான தீர்வுகள் நிச்சயமாகக் கிடைக்கும்” என்றும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: