திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக நியமனம் !
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அம்மணி அவர்கள், இன்றைய தினம், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு, (Appointed as Addl. Commissioner General of Publications, MOE, Isurupaya,Battaramulla.) தமது கடமையை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால் மட்டக்களப்பு வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடமும், கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது.
புதிய அரசு, அரசியல் தலையீடுகள் இன்றி, நேர்முகத் தேர்வு மூலம் இரு பதவி வெற்றிடங்களையும் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
No comments: